10-வது மாதத்தில் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

10-வது மாதத்தில் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு இப்போது நிறைய பற்கள் வளர்ந்திருக்கும். அவர்களால் உணவை மெல்வதும், விழுங்குவதும் சுலபமாக இருக்கும். ஆனால், சாப்பிடதான் அடம் பிடிப்பார்கள். விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதுதான் காரணம். குழந்தை சரியாக சாப்பிடாததால் தாய்மார்கள் கவலையில் இருப்பார்கள். இந்த 10-வது மாதத்தில் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்?

பற்கள் வளர்ந்து கொண்டிருப்பதாலும் சாப்பிட மறுப்பார்கள். இந்த வயதில் சில உணவை சாப்பிடுவது குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் மறுப்பது போன்றவற்றையும் செய்வார்கள்.

நிறைய பெற்றோர் கேட்பார்கள் எப்போது குழந்தைகள் பெரியவர்கள் போல அனைத்து உணவுகளையும் சாப்பிட தொடங்குவார்கள்? உங்கள் குழந்தை வளர்கிறதுதான். ஆனால் இந்த பருவத்தில் பெரியவர்கள் உணவைத் தர கூடாது. ஒரு வயதுக்கு பிறகு குழந்தைகளுக்கு பெரியவர்கள் உணவைக் கொடுக்கலாம்.

ஒரு வயதுக்கு முன் கொடுக்க கூடாத உணவுகள்

 • உப்பு
 • சர்க்கரை
 • வேக வைக்காத முட்டை, பாதி வேக வைத்த முட்டை
 • நிறைய நார்ச்சத்து கொண்ட உணவுகள்
 • வேக வைக்காத காய்கறிகள், முழு பழங்கள், முழு நட்ஸ் போன்றவை

10-வது மாதத்தில் கொடுக்க வேண்டிய உணவுகள்

 • சிட்ரஸ் பழங்களைத் தவிர்த்து அனைத்தையும் கொடுக்கலாம்.
 • பருப்பு வகைகள்
 • பயறு வகைகள்
 • சீசன் காய்கறிகள்
 • காலிஃப்ளவர்
 • மஷ்ரூம்
 • கத்திரிக்காய்
 • இந்த 10-வது மாத முடிவில் ஸ்பூனில் சாப்பிட நன்றாகப் பழகி கொள்வார்கள்.

10 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

food chart for 10 month babies

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

புது புது உணவுகளைக் கொடுத்தாலும் தாய்ப்பாலைத் தொடருங்கள். தாய்ப்பால், ஃபார்முலா மில்க் தொடர்ந்து தருவது நல்லது.

இரவு தூங்க செல்லும் முன் அல்லது மதியத்தில் குழந்தை தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம்.

இந்திய மசாலா உணவுகளைக் குழந்தைக்கு கொடுக்கப்படும் உணவுகளில் சேர்க்கலாம்.

ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்… 

10 மாத குழந்தைகளுக்கு கொடுக்க சில உணவு வகைகள்

கீரை – உருளை நக்கெட்ஸ்

spinach nuggets for 10 month babies

Image Source: bite-sized thoughts

தேவையானவை

 • வேக வைத்து மசித்த உருளை – 1
 • கீரை – ஒரு கைப்பிடி
 • மஞ்சள் – ½ டீஸ்பூன்
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

 • ஒரு பாத்திரத்தில் மசித்த உருளை, கீரை, மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.
 • சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து டிக்கி வடிவில் தட்டையாக்கவும்.
 • பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
 • எண்ணெய் சூடானதும் பொரித்து எடுக்கவும்.
 • சூடு ஆறியதும் குழந்தைக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி 

கத்திரிக்காய் ரோஸ்ட்

brinjal roast for 10 month babies

Image Source: doublesidedspoon

தேவையானவை

 • கத்திரிக்காய் – 2
 • ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்
 • பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
 • துளசி – ¼ டீஸ்பூன்

செய்முறை

 • கத்திரிக்காயைத் தோல் நீக்கி மெல்லியதாக அறிந்து கொள்ளவும்.
 • மிதமான தீயில் கத்திரிக்காயை வைத்து எண்ணெய் ஊற்றி ரோஸ்ட் செய்யவும்.
 • மேலே பூண்டு, துளசி விழுதை சேர்த்து ரோஸ்ட் செய்யவும்.
 • வெந்ததும் இறக்கி விடவேண்டும்.
 • இளஞ்சூடாக குழந்தைக்கு தரலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

வாழைப்பழ தோசை

banana dosa for 10 month babies

Image Source: archanas kitchen

தேவையானவை

 • மசித்த வாழைப்பழம் – 1
 • தோசை மாவு – ½ கப்
 • நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

 • வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.
 • மசித்த வாழைப்பழத்தை மாவில் சேர்க்கவும்.
 • தவாவில் நெய் ஊற்றி சின்ன சின்ன தோசைகளாக சுட்டெடுக்கவும்.
 • இரு பக்கமும் பொன்னிறமாக வந்ததும் தோசையை எடுத்துவிடலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null